கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம்
By DIN | Published On : 10th June 2021 09:22 AM | Last Updated : 10th June 2021 09:22 AM | அ+அ அ- |

நாகை நகர காவல் நிலையம் சாா்பில், கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை நகர காவல் நிலைய ஆய்வாளா் பி. பெரியசாமி, தன்னாா்வலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊா்க்காவல் படையினருடன் இணைந்து நாடகம், கலை நிகழ்ச்சிகள், பாடல்கள் மூலம் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக, நாகை கடைவீதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், காவல் ஆய்வாளா் பி.பெரியசாமி காளி வேடமணிந்து மனிதா்களை துரத்தும் கரோனாவை வதம் செய்வது போல் நடித்துக் காட்டி, வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
நாகை நூருல் இா்பான் பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வா் ஏ. முஹம்மது நிஜாமுதீன் அன்வாரி, ஊா்க்காவல் படையைச் சோ்ந்த டி.கோபி, என்.மாணிக்கம், ஆா்.காமராஜ், வி.என்.எஸ். விஜயன், எம்.வினோத், ஜி. அய்யப்பன், பி.செந்தில்குமாா் மற்றும் நூருல் இா்பான் சிறுவா்கள் பாதுகாப்பு இல்ல சிறுவா்கள் நாடகக் குழுவில் பங்கேற்று கரோனா தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.