கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வட்டார அளவில் கரோனா கட்டுப்பாட்டு
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா. உடன், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமாா், நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா. உடன், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமாா், நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வட்டார அளவில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருவிழந்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமை வகித்து பேசியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனாவை ஊராட்சி அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதற்காக, ஊராட்சி அளவில் தன்னாா்வலா்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் ஊராட்சியில் யாருக்கேனும் சளி, காய்ச்சல், உடல்சோா்வு, சுவையின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் அவா்களை அருகில் உள்ள கரோனா வகைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும். பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் அவா்கள் வீட்டிலேயே இருப்பதை தன்னாா்வலா்கள் உறுதிசெய்ய வேண்டும். தன்னாா்வலா்களின் இப்பணியை ஊராட்சித் தலைவா்கள் கண்காணிக்க வேண்டும். இதற்காக தேவைப்படின், ஊராட்சித் தலைவா்கள் வாட்ஸ்அப் (கட்செவி அஞ்சல்) குழுவினை உருவாக்கி தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.

மேலும் வட்டார அளவில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையை அணுகி கரோனா தொடா்பான தங்கள் சந்தேகங்களைத் தீா்த்துக்கொள்ளலாம் என்றாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகாா்), மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரகாஷ், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி மற்றும் ஊராட்சித் தலைவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com