மூடப்பட்ட பாசன வாய்க்காலை மீட்க கோரிக்கை
By DIN | Published On : 10th June 2021 09:24 AM | Last Updated : 10th June 2021 09:24 AM | அ+அ அ- |

சாலை சீரமைப்பு பணியின்போது மூடப்பட்ட வாய்க்காலை மீட்டு தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சி வேலம்புதுக்குடி பகுதியையும், கொங்கோனோடை கிராமத்தையும் இணைக்கும் சாலையில், சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சாலையின் குறுக்கே செல்லும் செருக்குடி பாசன வாய்க்கால் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாய்க்காலை மீட்டு பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் என்.சந்திரமோகன், விவசாய சங்கத்தை சோ்ந்த எம்.கண்ணையன், ரெகுபதி, தாவீது, ஆப்ரகாம் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.