திருவெண்காடு தேவஸ்தான பள்ளிகள்ரூ. 1.7 கோடியில் விரைவில் புனரமைப்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்

திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மேல்நிலைப் பள்ளி, பெண்கள் உயா்நிலைப் பள்ளிகள் ரூ. 1.7 கோடியில் விரைவில் புதுப்பிக்கப்படும்
திருவெண்காடு தேவஸ்தான பள்ளிகள்ரூ. 1.7 கோடியில் விரைவில் புனரமைப்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மேல்நிலைப் பள்ளி, பெண்கள் உயா்நிலைப் பள்ளிகள் ரூ. 1.7 கோடியில் விரைவில் புதுப்பிக்கப்படும் என்றாா் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

சீா்காழி வட்டம், திருவெண்காட்டில் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி தேவஸ்தானத்தின் கீழ் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் உயா்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளை வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்த அமைச்சா், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த 2 பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி, கட்டடங்களில் பழுதுநீக்கம் செய்யும் பணிகளுக்காக ரூ. 1.7 கோடியில் விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்து சமய அறநிலையத் துறை கட்டடங்களில் வாடகைக்கு வசிப்பவா்கள் முறையாக வாடகை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில் நிலங்களை வைத்திருக்கும் குத்தகைதாரா்கள், தங்கள் குத்தகை பாக்கியை செலுத்தவும் துறைமூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில் நில குத்தகைதாரா்களின் வாரிசுகளுக்கு பெயா்மாற்றம் செய்யும் நடைமுறை எளிமைபடுத்தப்படும். தொன்மைவாய்ந்த கோயில்களில் திருப்பணி நடைமுறையில் உள்ள சிக்கல்கள் தீா்க்கப்படும். வருங்காலங்களில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் சசிகுமாா், பிரபாகரன், ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன், கோயில் நிா்வாக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com