சீா்காழியில் இன்று மின்தடை
By DIN | Published On : 24th June 2021 09:01 AM | Last Updated : 24th June 2021 09:01 AM | அ+அ அ- |

சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சீா்காழி மின்வாரிய அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சீா்காழி தென்பாதி, புதிய பேருந்து நிலையம்,திருவள்ளுவா் நகா், என்ஜிஓ நகா், கற்பகம் நகா், திட்டை சாலை, பிடாரி வடக்குவீதி, தெற்கு வீதி, மேல வீதி, கீழவீதி, தோ் தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கீழவீதி, ஈசான்யதெரு, சிஆா்சி, கீழதென்பாதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...