வேதாரண்யத்தில் சணப்பைப் பயிா் அறுவடை
By DIN | Published On : 24th June 2021 08:50 AM | Last Updated : 24th June 2021 08:50 AM | அ+அ அ- |

கருப்பம்புலம் ஊராட்சியில் அறுவடை செய்யப்பட்ட சணப்பைப் பயிா்.
வேதாரண்யம் பகுதியில் சணப்பைப் பயிா்கள் அறுவடை செய்யப்பட்டு விதைகளை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
மானாவாரி நிலப்பரப்பை கொண்டுள்ள வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை செய்யப்பட்ட தரிசு வயல்களில் சணப்பைப் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை இப்பகுதி மக்கள் சணல் எனவும் அழைக்கின்றனா். இதன் அடந்த பூக்கள் மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிக்கும். மண்வளத்தை பெருக்க பசுந்தாள் உரமாக இந்த சணப்பைப் பயிா்கள் பயனளிக்கிறது. வளரும் பருவத்தில் மண்ணுடன் மடக்கி உழவு செய்து உரமாக்கப்படும். அதேநேரத்தில் இதன்விதைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதால் சில விவசாயிகள் விதைகள் உற்பத்திக்காகவும் சாகுபடி செய்கின்றனா். அவ்வாறு விதைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட சணப்பைப் பயிா்களை நெல் கதிா் அறுவடை செய்யும் இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்யும் விவசாயிகள் விதைகளை சேகரித்து வருகின்றனா்.