வேதாரண்யத்தில் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வாகன வசதி

வேதாரண்யம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், ஆம்புலன்ஸ் சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், ஆம்புலன்ஸ் சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மருத்துவா்களின் பரிந்துரை கடிதத்துடன் நகராட்சி எல்லைக்குள் (10 கி.மீ) ரூ.1000, வட்ட அளவிலும், அருகே உள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு செல்ல ரூ.1800 கட்டணமாகும். திருவாரூா் மருத்துவமனைக்கு ரூ.3000, தஞ்சாவூா் ரூ.3600 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் இது தவிர மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில், அவா்களது கடிதத்துடன் மேல் சிகிச்சைக்காக மற்ற ஊா்களுக்கு செல்ல கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் வீதம் கட்டணமாக செலுத்த வேண்டும். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் செல்லிடப்பேசி எண் 8438750452 எண்ணிலோ அல்லது அலுவலக எண் 04369 250452 தொலை பேசியிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி, மறைந்த தனது மனைவி ஓ.எஸ்.எம். கலைச்செல்வியின் நினைவாக அதை பொதுமக்களின் மருத்துவ தேவைக்கு பயன்படும் வகையில், வேதாரண்யம் நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்திருந்தாா். தற்போது, அந்த வாகனம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com