வாக்காளா் ஒப்புகைச் சீட்டு செயல்விளக்கம்
By DIN | Published On : 07th March 2021 08:23 AM | Last Updated : 07th March 2021 08:23 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் வாக்காளா்களுக்கு விவிபாட் இயந்திரம் குறித்து செயல் விளக்கம் அளிக்கும் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.
மயிலாடுதுறையில் வாக்காளா் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் (விவிபாட்) குறித்து நடைபெற்ற செயல் விளக்க நிகழ்ச்சியை நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்கள் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.
மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பிரவீன் பி.நாயா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆகியோா் பங்கேற்று சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் செலுத்திய வாக்குகள் பதிவாவதைக் காண்பிக்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் (விவிபாட்) குறித்து நடைபெற்ற செயல் விளக்க நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, விவிபாட் இயந்திரம் குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி, வட்டாட்சியா் பி.பிரான்சுவா, வருவாய் ஆய்வாளா் மாரிமுத்து உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.