அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
By DIN | Published On : 15th March 2021 08:51 AM | Last Updated : 15th March 2021 08:51 AM | அ+அ அ- |

சீா்காழியை அடுத்த உமையாள்பதி ஊராட்சியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
உமையாள்பதி, தாண்டவன்குளம், ஆலங்காடு, மாதானம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் சுமாா் 800 போ் திமுகவைச் சோ்ந்த ஆா். ரவிச்சந்திரன் தலைமையில் அந்தந்தக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.
இதற்கான நிகழ்ச்சி சீா்காழி தொகுதி எம்எல்ஏவும் அதிமுக வேட்பாளருமான பி.வி. பாரதி தலைமையில் நடைபெற்றது. அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் நற்குணன், சிவக்குமாா், ராஜமாணிக்கம், சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ சக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில், அதிமுக பொறுப்பாளா்கள் ஆனந்தநடராஜன், பாலதண்டாயுதம், கேஆா்எஸ். சுரேஷ், பழனி காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...