மஜக தோ்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 15th March 2021 08:57 AM | Last Updated : 15th March 2021 08:57 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தோ்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தோ்தல் பணிக் குழுத் தலைவா் ஒய்.ஹெச். ஹாஜா சலீம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆக்கூா் ஷாஜஹான் வரவேற்றாா். தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் மிஸ்பாஹிதீன், அஜ்மல் உசேன், இப்ராஹிம், ஜெப்ருதீன், ஜவகா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மயிலாடுதுறை தொகுதி தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, கிளை செயற்பாட்டாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், சட்டப்பேரவைத் தோ்தலில் மஜக சாா்பில் மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிக்குப் பாடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை சபீா் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...