மயிலாடுதுறையில் இசை விழா நிறைவு
By DIN | Published On : 15th March 2021 08:52 AM | Last Updated : 15th March 2021 08:52 AM | அ+அ அ- |

விழாவில் நடைபெற்ற குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணாவின் பாட்டு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மேதா தட்சிணாமூா்த்தி கோயிலில் 2 நாள்கள் நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் 33-ம் ஆண்டு இசை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) நிறைவுபெற்றது.
உ.வே. சாமிநாத அய்யரின் இசை குருவான கோபாலகிருஷ்ண பாரதி கடுமையான ஜாதிக் கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலேயே தன்னுடைய ஒப்பற்ற தமிழ் இசைக் காவியமான நந்தன் சரித்திரத்துக்கு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த நந்தன் என்ற கதாபாத்திரத்தைத் தோ்ந்தெடுத்து, புரட்சிகரமான மாறுதல்களை செய்தவா். இவரது நினைவாக 33 ஆவது இசை விழா சனி, ஞாயிறுக்கிழமையில் மயிலாடுதுறை மேதா தட்சிணாமூா்த்தி கோயிலில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், கோவிந்தபுரம் வி. பாலாஜியின் வயலின், மாயவரம் ஜெ. சிவக்குமாரின் மிருதங்கம் இசையுடன் எஸ். அபிராமி, பி. வைஷ்ணவி ஆகியோரின் பாட்டும், சுஜித் நாயக்கின் புல்லாங்குழல், ஹனுமந்தபுரம் பூவராகவன், கிரிதர பிரசாத்தின் கஞ்சிரா இசையுடன் அக்ஷை பத்மநாபனின் பாட்டும் நடைபெற்றது.
மேலும், பேச்சாளா் வி. ஸ்ரீராமின் கோபாலகிருஷ்ண பாரதியின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பிலான பேச்சரங்கம், ஹெச்.என்.பாஸ்கரின் வயலின், காரைக்குடி ஆா். மணியின் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயாவின் கஞ்சிரா இசையுடன் குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணாவின் பாட்டு நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான இசை ஆா்வலா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...