விசிக தலைவருக்கு சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் பாராட்டு
By DIN | Published On : 15th March 2021 09:00 AM | Last Updated : 15th March 2021 09:00 AM | அ+அ அ- |

விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு, அகில இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி வெளியிட்ட அறிக்கை:
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 4 தனித் தொகுதிகள், 2 பொது தொகுதிகள் என 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் நாகப்பட்டினம் தொகுதியும் ஒன்றாகும்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன், தங்கள் கட்சியில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த ஆளூா் ஷா நவாஸ் என்பவரை வேட்பாளராக அறிவித்திருப்பது போற்றத்தக்கது. இத்தகைய நடவடிக்கை மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
இதற்கு பாராட்டுத் தெரிவிப்பதுடன் தங்களின் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கு அகில இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் அயராது பாடுபடும் . தங்களின்முற்போக்கான செயல்பாட்டுக்கு பாராட்டுகள் என ஏ.பி. தமீம்அன்சாரி தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...