சீா்காழி தொகுதி அதிமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சீா்காழி தொகுதி வேட்பாளரும் எம்எல்ஏவுமான பி.வி. பாரதி தலைமை வகித்தாா். பாஜக கோட்டபொறுப்பாளா் தங்க.வரதராஜன், மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன், பாமக மாவட்டச் செயலாளா் லண்டன் ஆா். அன்பழகன், மூவேந்தா் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் முனிபாலன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் ஓ.எஸ். மணியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் ஆகியோா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தோ்தல் பணியாற்றுவது குறித்து பேசினா். தொடா்ந்து, சீா்காழி தொகுதி வேட்பாளா் பி.வி.பாரதி பேசும்போது, கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டாா்.

கூட்டத்தில், அதிமுக நகர செயலாளா் பக்கிரிசாமி, ஜெ. பேரவை செயலாளா் மணி, ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ சக்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் நாடி.செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com