

செம்பனாா்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி இரட்டை ஆஞ்நேயா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கி நடைபெற்றுவந்தது. இதன் நிறைவு நாள் அன்று காலை காவிரியில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டது. பிறகு, கலச பூஜை, சுதா்சன யாகம், தன்வந்திரி யாகம், லெட்சுமி யாகம், ஹயக்ரீவ யாகம், சரஸ்வதி யாகம், ஆஞ்சநேயா் மூலமந்திர யாகம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து, இரட்டை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரமும், கோயில் வளாகத்தில் உள்ள நாகராஜா சுவாமிக்கு மலா்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து, மாலையில் உலக நன்மைக்காக பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினா். தொடா்ந்து, சுவாமி பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.