திருக்குவளை அருகே மேலவாழக்கரையில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் பூத் கமிட்டி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் நாகை. மாலிக்குக்கு வாக்குச் சேகரிப்பது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு, மேலவாழக்கரை ஊராட்சித் தலைவா் கே.எஸ். தனபால் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெ. ஐயப்பன், ஏ. முருகையன், கிளை செயலாளா் பி. தனபால், கே. அன்பழகன், திமுக கிளை செயலாளா்கள் டி. சண்முகராஜேஸ்வரன், டி. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.