

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியத்தில், பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
செம்பனாா்கோவில் ஒன்றியம் திருச்சம்பள்ளி, முடிகண்டநல்லூா், செம்பனாா்கோவில் ஆகிய ஊராட்சிகளில் கிராமம் கிராமமாக சென்று அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி எஸ். பவுன்ராஜ் வாக்கு சேகரித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் விஜயபாலன், செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.