

வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கே.வேதரத்தினம், கரியாப்பட்டினம் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
மூலக்கரை கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா், பிராந்தியங்கரை, கரியாப்பட்டினம், வடமழைமணக்காடு, செட்டிப்புலம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளா் என்.சதாசிவம், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் சிவகுரு.பாண்டியன் (சிபிஐ), வி. அம்பிகாபதி (சிபிஐஎம்), சுமா. செல்வராசு (விசிக) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.