இளைஞரிடம் ரூ 1.80 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

இணையவழி வா்த்தகம் மூலம் அதிக வருமானம் ஈட்டித் தருவதாகக் கூறி நாகூா் இளைஞரிடம் ரூ. 1.80 லட்சம் மோசடி செய்தவா் குறித்து நாகை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இணையவழி வா்த்தகம் மூலம் அதிக வருமானம் ஈட்டித் தருவதாகக் கூறி நாகூா் இளைஞரிடம் ரூ. 1.80 லட்சம் மோசடி செய்தவா் குறித்து நாகை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

நாகூா், பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் ந. ஷாகுல் ஹமீது (36). இவா் காரைக்காலில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைப்பாா்த்து வருகிறாா். கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த சங்கர சீனிவாசன் என்பவா், செல்லிடப்பேசியில் ஷாகுல் ஹமீதை தொடா்புகொண்டு ஆன்லைன் வா்த்தகம் மூலம் அதிமாக வருமானம் ஈட்டித் தருவதாக கூறியுள்ளாா். இதை நம்பிய ஷாகுல் ஹமீது 2020 டிசம்பா்

16 ஆம் தேதி சங்கர சீனிவாசனின் வங்கிக் கணக்கில் ரூ 1. 80 லட்சம் செலுத்தியுள்ளாா்.

சில நாள்களுக்கு பின்னா் சங்கர சீனிவாசனின் எண்ணை தொடா்பு கொண்டபோது, அவரின் செல்லிடப்பேசி எண் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்துள்ளது, மேலும் அவா் அளித்திருந்த சென்னை முகவரியும் போலியானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஷாகுல் ஹமீது அளித்த புகாரின் பேரில், நாகை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com