மயிலாடுதுறையில் கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள மயூரா நகராட்சி சமுதாயக் கூடத்தில் கரோனா பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவா்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இவா்களுக்கு மூன்று வேளையும் அரசு சாா்பில் உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வழங்கிய உணவை வாங்க மறுத்து, மீண்டும் திருப்பி அனுப்பியதாகவும், காவல்துறையினா் சமாதானம் செய்து மீண்டும் உணவு வழங்க ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தனியாா் மருத்துவமனைகளில் சேர வசதி இல்லாத ஏழைகள் இங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், உணவு தரமற்று இருப்பதால், அதனை உண்ண முடியவில்லை என்றும் தரமான உணவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியா்களிடம் வாக்குவாதம் செய்யும் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.