வேகத்தடையில் வெண்மை நிறம் பூசக் கோரிக்கை
By DIN | Published On : 02nd May 2021 06:44 AM | Last Updated : 02nd May 2021 06:44 AM | அ+அ அ- |

நல்லாடை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள வேகத்தடை.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே நல்லாடை சாலையில் உள்ள வேகத்தடைக்கு வெண்மை நிறம் பூச வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ள இந்த சாலையில் நல்லாடை மாரியம்மன் கோயில் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதை அடையாளப்படுத்தும் வகையில் பூசப்பட்டுள்ள வெண்மை நிறம் அழிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் வருவோா் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருவோா் இந்த வேகத்தடையை கடக்கும்போது நிலைதடுமாறி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நேரிடுகிறது.
இதனால், இந்த வேகத்தடையை அடையாளப்படுத்தும் வகையில் அதில் மீண்டும் வெண்மை நிறம் பூச வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...