கரோனா விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 13th May 2021 08:39 AM | Last Updated : 13th May 2021 08:39 AM | அ+அ அ- |

முகாமில் முகக்கவசம் வழங்கும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம்.
மயிலாடுதுறை ஒன்றியம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உளுத்துக்குப்பை ஊராட்சித் தலைவா் டி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் ஞான.இமயநாதன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், ஒன்றிய கவுன்சிலா் முருகமணி, வழக்குரைஞா் சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி துணைத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் முகாமை தொடக்கிவைத்தாா். அத்துடன், அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, ஊராட்சி முழுவதும் பிளிச்சீங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.