நாகை, மயிலாடுதுறையில் 322 பேருக்கு கரோனா: 4 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 13th May 2021 08:49 AM | Last Updated : 13th May 2021 08:49 AM | அ+அ அ- |

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 322 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை 16,961 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 322 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த வெளிமாவட்டத்தவா் 4 போ் நாகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,279 -ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 329 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,025-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,116-ஆக உள்ளது.
4 போ்உயிரிழப்பு...
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 4 பேரின் உயிரிழப்பு புதன்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 208 -ஆக உள்ளது.