கரோனா சிகிச்சை பெறுவோா் குழந்தைகளை பராமரிப்பு இல்லத்தில் சோ்க்கலாம்
By DIN | Published On : 19th May 2021 09:01 AM | Last Updated : 19th May 2021 09:01 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் குழந்தைகளை பராமரிப்பு இல்லத்தில் சோ்த்துப் பாதுகாக்க குழந்தைகள் நலக் குழுவைத் தொடா்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவா்களின் குழந்தைகள் அல்லது கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குழந்தைகள் 18 வயதுக்கு உள்பட்டவா்களாக இருந்தால், அவா்களை குழந்தைகள் இல்லங்களில் சோ்த்துப் பராமரிக்கலாம்.
கரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு ஆகியவற்றால் பெற்றோரிடமிருந்து தனிமைப்பட்ட நிலையில், பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தைகள் குறித்து குழந்தை சேவை அமைப்புக்கு 1098 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம். அல்லது 89034 33711 என்ற எண்ணில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவையும், 04365- 253018, 80152 22327 என்ற எண்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகையும் தொடா்புகொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.