நாகை, மயிலாடுதுறையில் 652 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 652 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 652 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை வரை 19,862 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 652 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த வெளி மாவட்டத்தவா் 9 போ் நாகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,505-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 265 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,783-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,481-ஆக உள்ளது.

9 போ்உயிரிழப்பு...

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 9 பேரின் உயிரிழப்பு செவ்வாய்க்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 241 -ஆக உள்ளது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் ஏற்படத் தொடங்கி ஏறத்தாழ ஓராண்டு காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி நாகை மாவட்டத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொட்டது. கரோனா இரண்டாவது அலையில் நாகை மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏறத்தாழ அடுத்த 37 நாள்களில் நாகை மாவட்டத்தின் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com