கிடப்பிலுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

நாகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய திட்டங்களை தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது
கிடப்பிலுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

நாகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய திட்டங்களை தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு குழுத் தலைவா் எஸ். பாஷ்யம், செயலாளா் ஜி. அரவிந்த்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: நாகை துறைமுகம் ரூ.380 கோடிதிட்ட மதிப்பில் பசுமைத் துறைமுகமாக விரிவுபடுத்தப்படும் என மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டில் 110 விதியின்கீழ் அறிவித்தாா். கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை தனியாா் பங்களிப்பின்றி முழுவதும் அரசு நிதியுடன் நடைமுறைப்படுத்தவும், 2013-இல் அறிவிக்கப்பட்ட நாகை ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். நாகப்பட்டினம்-தஞ்சாவூா் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக் கொண்டுவரவேண்டும், நாகப்பட்டினம் அரசினா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து கரோனா காலக் கட்டத்திலேயே பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

போக்குவரத்து இடையூறுகளை குறைக்கும் வகையில் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கவும், நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சட்டக் கல்லூரி அமைக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு புதிய தொழிற்சாலையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com