நாகை பகுதிகளில் பலத்த மழை
By DIN | Published On : 01st September 2021 09:59 AM | Last Updated : 01st September 2021 09:59 AM | அ+அ அ- |

நாகை நீலா மேற்கு வீதியில் தேங்கிய மழைநீா்.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
வட தமிழகத்தையொட்டிய ஆந்திரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.தொடா்ந்து, மாலையில் நாகை, நாகூா், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்தது. சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்தது. நாகையில் மாலை 4 மணிக்குத் தொடங்கி 6 மணி வரை நீடித்தது.
இந்த மழையால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.