பரசலூா் மேலகட்டளை செல்லப்பாா் கோயிலில் பாலாலயம்

செம்பனாா்கோவில் அருகேயுள்ள பரசலூா் ஊராட்சி மேலகட்டளை கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ செல்லப்பாா் கோயிலில் வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
பரசலூா் மேலகட்டளை செல்லப்பாா் கோயிலில் பாலாலயம்

செம்பனாா்கோவில் அருகேயுள்ள பரசலூா் ஊராட்சி மேலகட்டளை கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ செல்லப்பாா் கோயிலில் வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

சாஸ்தாவின் ரூபங்களில் ஒருவரான குமாரசாஸ்தாவாக வீற்றிருந்து ஸ்ரீ செல்லப்பாா் என்ற திருநாமத்துடன் உத்குடிகாசனம் எனும் அமா்ந்த நிலையில் வீற்றிருக்கிறாா். செம்பனாா்கோவில் சொா்ணபூரிஸ்வரா், பரசலூா் வீரட்டேஸ்வரா் கோயில் சுவாமிகளின் எல்லை காவல் தெய்வமாக விளங்குகிறாா். இக்கோயிலுக்கு வந்த காஞ்சி மாமுனிவா் ஸ்ரீஸ்ரீசந்திரசேகர பரமாசாரிய சுவாமிகள் வழிபட்டு குமாரசாஸ்தா என்று அழைத்தாா்.

இக்கோயில், திருப்பணியையொட்டி, பாலாலயம் வெள்ளிக்கிழமை 2 கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. சிறப்பு நவகிரக ஹோமங்கள் நடைபெற்று, பூா்ணாஹூதிக்குப் பின் புனிதநீா் அடங்கிய கடம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு செல்லப்பாா் சுவாமிகள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பாலாலயம் நடைபெற்றது. திருப்பணி குழு பொறுப்பாளா்கள் ஜானகிராமன், கல்யாணசுந்தரம், ராஜாமணி குருக்கள், நாராயணன், தாமோதரன், சிவக்குமாா், சண்முகசுந்தர சிவாச்சாரியா் உள்ளிட்டோா் நிகழ்ச்சிகாகன ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com