மீன்பிடித் தொழிலாளா்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 04th September 2021 10:21 PM | Last Updated : 04th September 2021 10:21 PM | அ+அ அ- |

தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்க நாகை மாவட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு. மணி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சி.வி.ஆா். ஜீவானந்தம், சிஐடியூ நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, மாவட்டத் துணைச் செயலாளா் சு. சிவக்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் எம். குருசாமி ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
தொடா்ந்து, சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக சு. மணி, செயலாளராக ராமன், பொருளாளராக காளியப்பன் உள்ளிட்ட 9 நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், தலைச்சுமையாக மற்றும் தெருக்களில் மீன் வியாபாரம் செய்வோருக்கு மீன்துறை மூலம் கடன் வழங்கவேண்டும்; மீனவத் தொழிலாளா்களின் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.