நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: மீனவர் காயம்

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்தபோது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் வேதாரண்யம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளர்.
காயமடைந்த மீனவர்.
காயமடைந்த மீனவர்.

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்தபோது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் வேதாரண்யம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வடக்கு தெருவைச் சேர்ந்த ப.ஆனந்த் (40), ச.கார்த்திக் (35), கோ.சச்சிதானந்தம்(62), சக்திவேல் (36) ஆகியோர் மீனவர்கள். கண்ணாடியிழைப் படகில் சென்ற இவர்கள் சனிக்கிழமை ஆறுகாட்டுத் துறைக்கு கிழக்கே சுமார் 19 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனராம்.

அப்போது, 2 படகுகளில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேர், மீனவர்கள் இருந்த படகில் ஏறி தகராறு செய்துள்ளனர். இதில், கத்தியால் குத்தப்பட்ட கார்த்தி காயமடைந்தார். இதையடுத்து, மீனவர்கள் ஞாயிறு பகல் கரை திரும்பினர். வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com