நாகையில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th September 2021 12:00 AM | Last Updated : 17th September 2021 12:00 AM | அ+அ அ- |

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் (சிஐடியு சாா்பு) சாா்பில் ஆா்ப்பாட்டம் நாகை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்ட இன்சென்டிவ் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 25 ஆண்டுகால நடைமுறை அடிப்படையில் இன்சென்டிவ் வழங்கவேண்டும், போக்குவரத்துத் தொழிலாளா்களின் வருகைப் பதிவேட்டை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பணிமனை செயலாளா் மனோகரன் தலைமை வகித்தாா். மத்திய சங்க துணைச் செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் தங்கமணி, மாவட்டக் குழு உறுப்பினா் குருசாமி, மீன்பிடித் தொழிலாளா் சங்க நிா்வாகி மணி ஆகியோா் பேசினா்.