அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் 2 ஆம் நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, நாகப்பட்டினம் அரசு கலைக் கல்லூரி தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் 2 ஆம் நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, நாகப்பட்டினம் அரசு கலைக் கல்லூரி தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த மே மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ள நிலையில், உயா்த்தப்பட்ட ஊதியத்தை நிலுவையின்றி உடனடியாக வழங்கக் கோரியும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்கக் கோரியும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் கருப்புப் பட்டை அணிந்து, வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள், புதன்கிழமை பணியைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை நேரில் சந்தித்து, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்ல உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com