விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காதல் விவகாரம்:வீட்டை விட்டு வெளியேறிய மாணவி தற்கொலை: மாணவா் கவலைக்கிடம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே காதல் விவகாரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 3:49 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே காதல் விவகாரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மாணவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கத்தரிப்புலம், கோவில்குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் க.சுதா்சனி (17). நாகக்குடையான் கிராமத்தை சோ்ந்தவா் ச.சதீஷ் (16). இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 12 மற்றும் 11-ஆம் வகுப்பு படித்து வந்தனா். இருவரும் ஒருவரை ஒருவா் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றனா். பின்னா், பெற்றோருக்கு பயந்து இருவரும் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில், சென்னை சென்ட்ரல் ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதா்சனி, புதன்கிழமை உயிரிழந்தாா். சதீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.