வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக நினைவு யாத்திரைக் குழுவினர் மௌனம் அனுசரிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று (ஏப்.29)  அடையாள மெளனம் மேற்கொண்டனர்.
வேதாரண்யத்தில் அடையாள மெனனம் மேற்கொண்ட யாத்திரைக் குழுவினருடன், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி.,பி.வி.ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார்.
வேதாரண்யத்தில் அடையாள மெனனம் மேற்கொண்ட யாத்திரைக் குழுவினருடன், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி.,பி.வி.ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று (ஏப்.29)  அடையாள மெளனம் மேற்கொண்டனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ல் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு நிகழாண்டு சிறப்பான வகையில் கொண்டாடப்படுகிறது.

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு யாத்திரை முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில் ஏப்.13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கியது.

இந்த குழுவினர் 232 கிலோ மீட்டர் தொலைவை நடைபயணமாக மேற்கொண்டு வியாழக்கிழமை இரவு வேதாரண்யம் வந்தடைந்தனர்.

இந்த குழுவினர் இன்று காலையில் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் அடையாள மெளனம் மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மெளனத்தில், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னால் எம்.பி., பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார் பங்கேற்றனர்.


மாலையில் உப்புத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு யாத்திரை குழுவினருடன் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து பேரணி நடைபெறுகிறது. இந்த குழுவினர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காலை 7 மணிக்கு அகஸ்தியம் பள்ளி நினைவு தூண் வளாகத்தில் உப்பு அள்ளும் நிகழ்சியில் ஈடுபடுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com