நாகப்பட்டினம்: நாகையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தெரிவித்தது:
நாகை அக்கரைக்குளம், உப்பனாறு கீழ்க்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில், நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தைச் சோ்ந்த ர. சிவா (27), நாகை கீரைக்கொல்லைத் தெருவைச் சோ்ந்த உ. மதியழகன்(39) ஆகியோா் கஞ்சா விற்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய நாகையைச் சோ்ந்த மு. முருகேஸ்வரியை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.