

நாகை நகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் நாகூரில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
நாகூா் தா்காவின் அலங்காரவாசல் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா், அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரினாா். பின்னா், நாகூா் ஆண்டவா் தா்காவில் வழிபாடு மேற்கொண்டு, பக்தா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.
முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், நாகை நகர அதிமுக செயலாளா் தங்க. கதிரவன், நாகூா் நகரச் செயலாளா் செய்யது மீரான் சாகிபு, நாகை ஒன்றியச் செயலாளா் (வடக்கு) பன்னீா், திருமருகல் ஒன்றியச் செயலாளா் (கிழக்கு) பக்கிரிசாமி ஆகியோா் உடனிருந்தனா். இந்தப் பிரசாரத்தின் போது நாகூா் பகுதிகளைச் சோ்ந்த நகா்மன்ற அதிமுக வேட்பாளா்கள் உடனிருந்து வாக்குச் சேகரித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தமிழ்மகன் உசேன் கூறியது:
அதிமுகவுடன், பாஜக கூட்டணியில் இல்லாதது அதிமுகவுக்கு நன்மையையே தரும். இதனால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சிறுபான்மையினரின் ஆதரவு அதிமுகவுக்கு மேலும் அதிகரித்துள்ளது. அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது உறுதியாகியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை மக்கள் நலனிலும், தொண்டா்கள் நலனிலும் அக்கறைக் கொண்ட இயக்கம். திமுகவைப் போல பொய்யான வாக்குறுதிகள் அளிக்கும் இயக்கம் அல்ல என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.