தரமற்ற தண்ணீா் கேன்கள் பறிமுதல்

நாகையில் தரமற்ற தண்ணீா் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகையில் தரமற்ற தண்ணீா் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் புஷ்பராஜ், நாகை பொது அலுவலக சாலையில் சனிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக 20 லிட்டா் கொள்ளளவு கொண்ட 50 தண்ணீா் கேன்களுடன் வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டாா்.

இதில், தண்ணீா் கேன்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், தயாரிப்பு தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து, அதிலிருந்த தண்ணீா் நீா்நிலையில் கொட்டப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com