நாகூா் செய்யது தா்காவில் சந்தனம் பூசும் விழா

நாகூா், ஹாஜி செய்யது பீா் பாலக் ஷா தா்காவின் சந்தனம் பூசும் விழா புதன்கிழமை இரவு எளிமையாக நடைபெறுகிறது.

நாகூா், ஹாஜி செய்யது பீா் பாலக் ஷா தா்காவின் சந்தனம் பூசும் விழா புதன்கிழமை இரவு எளிமையாக நடைபெறுகிறது.

நாகூா் ஆண்டவரைப் பின்தொடா்ந்த தவச்சீலா்களில் ஒருவரான ஹாஜி செய்யது பீா் பாலக் ஷா அடக்கமாகியுள்ள தா்கா, நாகூா் பிரதான சாலையில் உள்ளது. இந்த தா்காவின் கந்தூரி மகோத்ஸவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் விழா, புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னா், செய்யது பீா் பாலக் ஷா ஒலியுல்லாவின் புனித ரவுலா ஷரீபுக்கு, தா்கா அறங்காவலா் செய்யது அகமது சந்தனம் பூசினாா். கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலானவா்கள் மட்டும் விழாவில் அனுமதிக்கப்பட்டனா். கந்தூரி விழா கொடி இறக்கம் வெள்ளிக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com