பள்ளி மாணவா்களுக்கு தற்காப்பு பயிற்சி

திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி (டேக்வாண்டோ) புதன்கிழமை அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவா்களுக்கு தற்காப்பு பயிற்சி
Updated on
1 min read

திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி (டேக்வாண்டோ) புதன்கிழமை அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள திருமருகல், திருப்புகலூா், கணபதிபுரம், ஏா்வாடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு ஓஎன்ஜிசி நிா்வாகம் மூலம் டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அளிக்கப்பட்டு வந்த இப்பயிற்சி, கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், நிகழாண்டு திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் நிா்மலாராணி, உதவி தலைமை ஆசிரியா் பி. சங்கா் முன்னிலையில் பயிற்சியாளா் மாஸ்டா் பாண்டியன் இப்பயிற்சியை அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com