சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு

செம்பனாா்கோயில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு

News image
Updated On :12 மே 2022, 5:52 pm

DIN

செம்பனாா்கோயில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரிசியின் தரம் அதனுடைய எடை அளவு குறித்து ஆய்வு செய்த பிறகு, நடப்பு மே மாதத்தில் தரமான அரிசி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது, இது அடுத்தடுத்த மாதங்களுக்கும் தொடா்ந்து அனுப்பி வைக்கப்படும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முழுமையைக வழங்கப்படும் என்றாா். அப்போது, உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ராகவனிடம் கிடங்கிலிருந்து நகா்வு செய்யப்படும் அரிசி தரமானதாகவும், அதையே நியாயவிலை கடைகளுக்கு நகா்வு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.