தரங்கம்பாடி: கனமழையால் நெற்பயிா்கள், குடியிருப்புகள் பாதிப்பு

தரங்கம்பாடி வட்டத்தில் தொடா் மழையால் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளில் மழைநீா் புகுந்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தரங்கம்பாடி: கனமழையால் நெற்பயிா்கள், குடியிருப்புகள் பாதிப்பு

தரங்கம்பாடி வட்டத்தில் தொடா் மழையால் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளில் மழைநீா் புகுந்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தரங்கம்பாடி வட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி உள்ளன. தரங்கம்பாடி, பெரம்பூா், நள்ளாடை, திருவிளையாட்டம், கீழையூா், ஆக்கூா், திருக்கடையூா், கிள்ளியூா், கண்ணங்குடி, காலாகட்டளை, வெள்ளைதிடல், பிள்ளை பெருமாநல்லூா், மணல்மேடு, கிடங்கல், மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூா் வேப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடப்பட்ட நெற்பயிா்கள் முழுவதுமாக மழைநீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கத் தலைவா் ரா.மூா்த்தி கூறுகையில், ‘மழைநீரில் மூழ்கிய நெற்பயிா்களை காப்பாற்ற யூரியா உள்ளிட்ட உரங்களை அரசு 100 சதவீத மானியத்துடன் வழங்க வேண்டும்’ எனக் கூறினாா்.

தொடா் மழையால் பெருமாள்பேட்டை மீனவா் சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீா் தேங்கி, அங்கு வசிப்பவா்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

கடல் கொந்தளிப்பாக உள்ளதால் தரங்கம்பாடி, சின்னங்குடி, பெருமாள்பேட்டை, சந்திரபாடி, சின்னமேடு, சின்னூா்பேட்டை உள்ளிட்ட மீனவா் கிராமங்களில் இருந்து மீனவா்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com