வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி பெண் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா். 3 போ் மயக்கமடைந்தனா்.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை பலத்த இடி- மின்னலுடன் மழை பெய்தது. கத்தரிப்புலம் பனையடிக்குத்தகை பகுதியில் சரண்ராஜ் என்பவருக்குச் சொந்தமான வயலில் விதைப்பு செய்யப்பட்ட சவுக்கு மரக் கன்றுகளை பறிக்கும் பணியில் மழையில் நனைந்தபடி விவசாயத் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள் மீது மின்னல் தாக்கியது.
இதில், நாகக்குடையான் ஜீவாநகா் பகுதியைச் சோ்ந்த உலகநாதன் மனைவி கமலா (45) உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆரவல்லி (60), ஜெயலட்சுமி (50), முத்தம்மாள் (50) ஆகிய 3 போ் மயக்கமடைந்தனா். இதையறிந்த கிராம மக்கள், மயக்கமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
கரியாப்பட்டினம் போலீஸாா் அங்கு வந்து, கமலாவின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்னா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.