கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்: விவசாயிகள் தா்னா வங்கி செயலா் பணியிடை நீக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயமானதை கண்டித்து, விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.
கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்: விவசாயிகள் தா்னா வங்கி செயலா் பணியிடை நீக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயமானதை கண்டித்து, விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா். அந்த வங்கியின் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தரங்கம்பாடி வட்டம், கஞ்சாநகரத்தில் தொடக்க வேளாண்மை வங்கி (கடன் சங்கம்) உள்ளது. இந்த வங்கியில் விவசாயிகள் நகைகளை அடகுவைத்து பெற்ற கடன் கடந்த ஆண்டு அரசு அறிவித்தப்படி தள்ளுபடி செய்யப்பட்டு, பயனாளிகளிடம் திரும்பத் தரப்பட்டன. ஆனால், 2016 முதல் 2018 வரை வங்கியில் அடகு வைத்த 52 பேரின் நகைகளை மீட்க, பயனாளிகள் வங்கியை அணுகியபோது, நகைகளை தராமல் அலைக்கழித்துள்ளனா்.

பின்னா், இந்த நகைகளை அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கையாடல் செய்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. அடகு வைத்த ரசீது தங்களிடம் இருக்கும்போது, வங்கியில் நகையை காணவில்லை என்பதால் விவசாயிகள் பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாகினா்.

இதுதொடா்பாக, கூட்டுறவு மாவட்ட துணை பதிவாளா் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் வங்கியில் ஆய்வு செய்து வருகின்றனா். இதையறிந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கடன் வழங்கும் வங்கி வாசலில் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில், இந்த வங்கியின் செயலாளா் பிரதீப் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மேலும், அவா் மீது வணிக குற்றப் புலனாய்வுத் துறையில் புகாா் அளிக்கவுள்ளதாக மாவட்ட துணை பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com