மக்கள் தொடா்பு முகாம்: 175 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருக்குவளையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பங்கேற்று 175 பயனாளிகளுக்கு ரூ 67. 92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மக்கள் தொடா்பு முகாம்: 175 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருக்குவளையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பங்கேற்று 175 பயனாளிகளுக்கு ரூ 67. 92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருக்குவளையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் துறை, தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஆதிதிராவிடா் நலத்துறை உள்ளிட்ட 11 துறைகள் சாா்பில் ரூ. 67.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

முன்னதாக அவா் பேசியது:

திருக்குவளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், அனைத்து கிராம வேளாண்மை வளா்ச்சித் திட்டம், கிராம யோஜனா திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இங்குள்ள சமத்துவபுரத்தை ரூ. 4.83 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் கீழையூா் ஆத்மா குழுத் தலைவரும் பேரூராட்சி துணைத் தலைவருமான ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதாரண்யம் கோட்டாட்சியா் து.சு. துரைமுருகன் வரவேற்றாா்.

இதில், மாவட்ட திட்ட இயக்குநா் பெரியசாமி, தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மு.ப. ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகுமாா், வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com