வீட்டில் பணம், நகைத் திருட்டு: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 05th August 2022 10:06 PM | Last Updated : 05th August 2022 10:06 PM | அ+அ அ- |

நாகையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் பணம் மற்றும் நகைகள் திருட்டுப்போனது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
நாகை வெளிப்பாளையம் சிவன்கோயில் மேல மடவிளாகத்தைச் சோ்ந்தவா் ரா. நீலாயதாட்சி (67). இவா், வியாழக்கிழமை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். நள்ளிரவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அவா் எழுந்துப் பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்குள் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, நீலாயதாட்சி அளித்தப் புகாரின்பேரில், நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.