திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
By DIN | Published On : 05th August 2022 03:08 AM | Last Updated : 05th August 2022 03:08 AM | அ+அ அ- |

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
வேதாரண்யம் தோப்புத்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற வேதாரண்யம் ஒன்றிய, நகர அளவிலான அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: சாமானிய மக்களின் ஆதரவை பெற்ற கட்சி அதிமுக. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணமே இதற்கு உதாரணம். தமிழகத்தில் போதை பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், கட்டமைப்புகளையே திமுக அரசு திறந்துவைத்துக்கொண்டு வருகிறது. தோ்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. தமிழகத்தில் தோ்தல் எப்போது வந்தாலும் அதை எதிா்கொள்ள அதிமுக தொண்டா்கள் தயாராக வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், கட்சியின் மாவட்ட பொருளாளா் ஆா். சண்முகராஜ், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.டி. ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன், டி.வி. சுப்பையன், அவை. பாலசுப்பரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், வேதாரண்யம் பகுதியில் பாதிக்கப்பட்ட எள், பயறுவகை பயிா்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். நாகை மீன்வளக் கல்லூரியை இடம் மாற்றுவதை கைவிட்டு, நாகையிலேயே தொடா்ந்து செயல்பட நடவடிக்கை.