நாகையில் நவீன மீன் விற்பனை நிலையம் திறப்பு

கஜா புயல் மறுகட்டமைப்பு மறுவாழ்வு மற்றும் புனரமைப்புத் திட்டம் மூலம் நாகையில் அமைக்கப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகையில் நவீன மீன் விற்பனை நிலையம் திறப்பு

கஜா புயல் மறுகட்டமைப்பு மறுவாழ்வு மற்றும் புனரமைப்புத் திட்டம் மூலம் நாகையில் அமைக்கப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை கோட்டாட்சியா் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தை, தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் திறந்துவைத்துப் பேசினாா். அப்போது, பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் மீன் விற்பனை செய்ய ரூ. 10 லட்சம் மதிப்பில் நவீன மீன் விற்பனை நிலையம் அமைத்திட கஜா புயல் மறுகட்டமைப்பு மறுவாழ்வு மற்றும் புனரமைப்புத் திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நாகை மாவட்டத்தில் 2 நவீன மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, முதல் கட்டமாக நாகையில் நவீன மீன் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவுகள் விற்பனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவா் தெரிவித்தாா்.

நாகை கோட்டாட்சியா் முருகேசன் முன்னிலை வகித்தாா். நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com