நீா்த்தேக்க தொட்டி திறப்பு விழா
By DIN | Published On : 05th August 2022 03:09 AM | Last Updated : 05th August 2022 03:09 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி சமையன் தெருவில் புதிய தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் சுகுணா சங்கரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா முருகன் பங்கேற்று தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.
இதில், பேரூராட்சி செயல் அலுவலா் பூபதி. கமலக்கண்ணன், சுகாதாரஆய்வாளா் இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் முத்துராஜா,பேரூராட்சி துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.