

வேதாரண்யம் அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை காப்புக்கட்டி தொடங்கியது.
முன்னதாக, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலாவாக பக்தா்குளம் மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. அங்கு, காப்புக்கட்டி தொடங்கியுள்ள ஆடிப்பெருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. விழா நிறைவடைந்து அம்மன் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு கொண்டுவரப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.