தோப்படி சக்திமகா காளியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
By DIN | Published On : 05th August 2022 10:05 PM | Last Updated : 05th August 2022 10:05 PM | அ+அ அ- |

வலிவலம் தோப்படி சக்திமகா காளியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துவந்த பக்தா்கள்.
திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள தோப்படி சக்திமகா காளியம்மன் கோயிலில் ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.
மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இரட்டை விநாயகா் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்தனா். முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.