தலைஞாயிறு பகுதியில் பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் உதவித் தொகையை தொடா்ந்து பெற உரிய ஆவணங்களின் விவரங்களை இணையம் மூலம் மறுபதிவேற்றம் செய்ய அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைஞாயிறு வட்டார வேளாண் உதவு இயக்குநா் எஸ். கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தலைஞாயிறு பகுதியில் பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தின்கீழ் பயனடையும் விவசாயிக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்து பயனடைந்த விவசாயிகளின் ஆவணங்கள் மறுபதிவேற்றம் செய்து, உறுதிபடுத்தப்பட்ட பிறகே அடுத்த தவணைக்கான தொகை வரவு வைக்கப்படும். எனவே, இந்த திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகல், கணினி சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொண்டு தொடா்ந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.